Subscribe Us

header ads

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 இன்று

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20  தொடரின் முதலாவது போட்டி சிட்டகொங்கில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
பங்களாதேஷில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர் அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள இப் போட்டி மிக முக்கியமானதாகவும் அத்தொடருக்கான நல்லதொரு பயிற்சிப் போட்டியாகவும் அமைந்துள்ளது.
 
பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ள நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதல் போட்டியில் இன்று  களமிறங்குகின்றது.
 
தினேஷ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணியும் புதிய தலைவர் மெஸ்ரபி மொட்ரஷா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தும் என இரு நாட்டு ரசிகர்களுகம் எதிர்பார்த்துள்ளனர்.
 
இரு அணிகளும் இது வரையில் 2 இருபதுக்கு -20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments