வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் நிறுவனம் வாங்குவதை தடுப்பதற்காக 1900 கோடி (19 பில்லியன்) டொலர்களைவிட அதிக விலைகொடுத்து அதை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வட்ஸ்அப் நிறுவனத்தை 1900 கோடி டொலர் (சுமார் 248,476 கோடி இலங்கை ரூபா- 117,965 கோடி இந்திய ரூபா) விலைக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அவ்வளவு பெருந்தொகை விலைக்கு வட்ஸ் அப் நிறுவனத்தை வாங்குவதற்கு என்ன இருக்கிறது என விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், 1900 கோடி (19 பில்லியன்) டொலர்களைவிட அதிக விலைகொடுத்து வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான லறி பேஜ். வட்ஸ் அப் நிறுவுனத்தின் தலைவர் ஜான் கவ்மை கடந்த வாரம் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினாராம்.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுகர்பேர்க் வட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கவதற்கு 19 பில்லியன் வழங்கத் தயாராக உள்ளதாக அறிந்தவுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஜான் கவ்முக்கு பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் சபையில் ஆசனமொன்றை வழங்கவும் மார்க் ஸுகர்பேர்க் முன்வந்திருந்தார்.
இந்நிலையில், பேஸ் புக் நிறுவனத்துக்கு வட்ஸ் அப் நிறுவனம் சொந்தமாகிவிடுவதை தடுக்க வேண்டுமென கூகுள் விரும்பியதாம்.
ஆனால், பேஸ்புக் நிறுவனம் மேலும் சுயாதீனத் தன்மையை வழங்கும் எனவும் பேஸ் புக்கும் வட்ஸ் அப்பும் மக்களை ஒன்றிணைக்கும் பொது நோக்கத்தை கொண்டுள்ளது எனவும் ஜான் கவ்ம் கருதியதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments