பிரான்ஸின் பிரபல நடிகையான ஜூலி காயெட், அந்நாட்டு ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட்டுடன் இரகசிய காதல் தொடர்புகொண்டிருப்பதாக தகவல்வெளியானதையடுத்து, உயர் பதவியொன்றுக்கான சிபாரிசிலிருந்து அவரின்
பெயர் நீக்கப்பட்டுள்ளது.
41 வயதான நடிகை ஜூலியின் வீட்டுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட் (59) இரகசியமாக சென்றதை பிரெஞ்சு சஞ்கையான குளோஸர் புகைப்படங்களுடன் கடந்தவாரம் அம்பலப்படுத்தியது.
இவ்விவகாரம் பிரெஞ்சு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் நடிகை ஜூலியின் பொது வாழ்க்கையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரிலுள்ள பிரெஞ்சு அரசாங்கத்துக்குச் சொந்தமான வில்லா மெடிசி எனும் நிறுவகத்தின் ஜூரிகளில் ஒருவராக நடிகை ஜூலியை பிரெஞ்சு கலாசார அமைச்சினால் நியமிக்கப்படவிருந்தார்.
எந்தெந்த நடிகர்இ நடிகைகள் வில்லா மெடிஸி நிறுவகத்திலிருந்து உதவி
பெறுவதெனத் தீர்மானிப்பதுடன் சம்பந்தப்பட்ட முக்கிய பதவி இது.
ஆனால்இ ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்டுக்கும் ஜூலிக்கும் இடையிலான காதல் அம்பலமானதையடுத்து, ஜனாதிபதியை திருப்திப்படுத்துவதற்காக நடிகை ஜூலி இப்பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நடிகை ஜூலியின் நியமனம் இரத்துச் செய்யப்பட்டுவிட்டதாகபிரெஞ்சு கலாசார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜூலி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. இதேவேளை தனது அந்தரங்க உரிமைகளை மீறிய குற்றச்சாட்டில் மேற்படி சஞ்சிகைக்கு எதிராக நடிகை ஜூலி வழக்குத் தொடு க்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.

0 Comments