எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்
ஆர். இந்துமதி
அங்கொடை என்றாலே இலங்கை மக்கள் பலரின் மனதில் வருவது தலைவிரிகோலமாக ஆடைகளை கிழித்துக் கொண்டு உரக்கசிரித்த நிலையில் பார்க்க பயங்கர தோற்றத்தில் உள்ள மனிதர்கள் தான். எமது வீடுகளில் வித்தியாசமாக ஏதாவது ஒரு குழந்தை செய்து விட்டால் 'உன்ன அங்கொடைக்கு நன்கொடை கொடுக்கத்தான் லாயக்கு' என்று சொல்லும் நிலையை இன்றும் காண முடிகின்றது.
ஆனால், எம்மில் பலருக்கும் அங்கொடையில் என்ன நடக்கின்றது என்பதைப்பற்றி எதுவுமே தெரியாது. காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில் 1925 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பிஸ்ஸங்கொட்டுவ என்று மக்கள் மத்தியில் அறிமுகமான அங்கொடை தேசிய மனநல சுகாதார நிலையம் (NIMH).
இலங்கையில் மனநோயாளர்களை பராமரிப்பதற்கு ஆரம்ப காலங்களில் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அண்மித்த பகுதியிலேயே ஒரு இடம் அமைந்திருந்தது. அங்கே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அங்கொடையில் அமைக்கப்பட்ட குறித்த வைத்திய சாலைக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டனர்.
சர்வதேச அளவில் மனநோய் தொடர்பில் 1950 காலப்பகுதி வரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வரையில் மன நோயாளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வந்தன.
குறிப்பாக விவசாயம், மிருகவளர்ப்பு போன்ற செயற்பாடுகள் ஊடாக நோயாளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்தனர். 1950இன் பின்னய காலப்பகுதியில் உள நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பலர் அங்கிருந்து சிகிச்சை பெற்று வெளியேற ஆரம்பித்தனர்.
18 வருடமாக அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவர் எம்முடன் உரையாடியபோது 'உண்மையில் ஆரம்பத்தில் இந்த இடம் நரகத்தைப்போல்தான் இருந்தது. இங்கிருப்பவர்கள் மிருகங்கள் போல்தான் பார்க்கப்பட்டனர். வளாகத்துக்குள் ஈக்கள் நிறைந்து நாய்கள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கும். துர்நாற்றம் வீசும் பேய்கள் உலாவும் இருண்ட இடமாகத்தான் இந்த இடமிருந்தது. இங்கு உள்ளவர்கள் நோயாளிகளாகவே மதிக்கப்படவில்லை. இரவு நேரத்தில் ஒரு வைத்தியர்தான் இருப்பார். இது அந்நியப்படுத்தப்பட்ட இடமாக தான் இருந்தது.
அதனால் தான் என்னவோ இதனை மக்கள் பிஸ்ஸன் கொட்டுவ (பைத்தியங்களின் தொழுவம்) என்று அழைத்திருப்பார்கள்' என்றார். கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் இங்கு நல்ல பல மாற்றங்களை காணமுடிகிறது என அவர் தெரிவித்தார்.
தலைவிரிக்கோலமாக கத்திக் கொண்டு வீதியில் திரியும் உச்சகட்ட மனநோயாளிகள் தான் மனநோயாளர் காப்பகத்தில் சிகிச்சை பெறுவர் என்று பலர் எண்ணலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
அதனால் தான் என்னவோ இதனை மக்கள் பிஸ்ஸன் கொட்டுவ (பைத்தியங்களின் தொழுவம்) என்று அழைத்திருப்பார்கள்' என்றார். கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் இங்கு நல்ல பல மாற்றங்களை காணமுடிகிறது என அவர் தெரிவித்தார்.
தலைவிரிக்கோலமாக கத்திக் கொண்டு வீதியில் திரியும் உச்சகட்ட மனநோயாளிகள் தான் மனநோயாளர் காப்பகத்தில் சிகிச்சை பெறுவர் என்று பலர் எண்ணலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
நான்கு முறைகளில் ஒருவர் இவ்வைத்திய சாலையில் அனுமதி பெறமுடியும். வைத்திய சாலையில் ஒருவர் மனநோயாளி என இனங்கானப்பட்டு குடும்பத்தினரால் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படலாம். நீதிமன்றத்தால் ஒருவர் மனநோயாளியாக இனங்காணப்பட்டு நீதிமன்றத்தினுடாக அனுமதிக்கப்படலாம். ஒருவர் உள நோயினால் குற்றம் புரிந்தால் அவரை இங்கு அனுமதிக்கலாம், அல்லது ஒருவர் தனக்கு மானசீக ரீதியாக ஒரு நோய் இருப்பதாக உணர்ந்தால் அவர் சுயமாகவே அங்கு சென்று அனுமதி பெறலாம். வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய உள்ளக நோயாளியாகவோ அல்லது வெளியக நோயாளியாகவோ இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளமுடியும்.
அங்கொடை தேசிய மனநல சுகாதார நிலையத்தில் சுமார் 27 வார்ட்டுக்களில் தற்போது 700 இற்கு அதிகமான உளவியல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், விசேட தேவையுடையோர், கர்பிணித்தாய்மார், வயோதிபர்கள் என பல்வேறுபட்ட பிரிவுகளாக நோயாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாம் அங்கு சென்றபோது, பெண்கள் பகுதி, ஆண்கள் பகுதிகளில் வித்தியாசமான படிநிலைகளில் வித்தியாசமான பல காரணங்களால் பாதிக்கப்பட்ட மன நோயாளிகளை காணமுடியுமாக இருந்தது.
அவர்களில் பலர் காதல், குடும்ப விவகாரங்கள், பாலியல் வன்கொடுமை, தோல்விகள் என பல்வேறுபட்ட விடயங்களினால் பாதிப்பட்டு உளவியல் நோயாளிகளாக மாறியவர்கள் என்பதை அவர்களுடன் கதைத்த போது உணர்ந்து கொள்ள முடிந்தது.
அங்குள்ள நோயாளிகள் தனது உணர்வுகளை பிறருடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். தான் கதைப்பதை யாராவது செவிமடுக்க வேண்டும். தான் உணரும் உலகை பிறரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைகளுடன் தான் இருக்கின்றனர் என்பதை அவர்களோடு கழித்த சில மணிநேரங்களில் எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
பெண்கள் பகுதியில் ஒரு நோயாளி எம்மிடம் வந்து, 'நான் பைத்தியமா' என்று கேட்டுவிட்டு 'என்னை எங்கள் வீட்டார்கள் இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். நான் வீட்டுக்கு போனவுடன் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எல்லோருக்கும் அடிப்பேன். எனக்கு ரொம்பவே கோபம் வரும்'; என்று கூறினார். ஆனால் அந்தப் பெண்னை பார்ப்பதற்கு மிகச் சாதாரண ஒரு பெண்னாகவே எம்முடன் கதைத்துக் கொண்டிருந்தார்.
எம்மோடு உரையாடிய நோயாளிகளில் சிலர் 'சாப்பாடு கொண்டுவந்தீர்களா?', ' எங்களை கூட்டிப்போகவா வந்தீர்கள்? எனக்கு புரியாணி சாப்பிட ரொம்ப ஆசையா இருக்கு. வாங்கித்தருவீர்களா? என்று அவர்களது ஆவல்களை தெரிவித்தனர்.
குழந்தை பெற்ற தாய்மார்களை பராமரிக்கும் ஒரு பகுதிக்கு நாம் சென்றோம். தனியான அறைகளில் தாயும் சேயும் வைக்கப்பட்டிருந்தனர். அந்த அறைகளில் கணவர் அல்லது பெண்னை பராமரிக்க குடும்பத்தினர் ஒருவரும் தங்க முடியும் என்று அந்தப்பகுதிக்கு பொறுப்பான தாதி எம்மிடம் கூறினார்.
கர்ப்பிணி பெண்கள் குழந்தை கிடைத்த அண்மைய காலப்பகுதியில் 'பொஸ்பார்ட்டம் டிப்ரஷன்' என்ற நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயுடன் உரையாடினோம்.
'எனது மகள் குழந்தை கிடைப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் யாருடனும் கதைக்காமல் இருந்தாள். நாங்கள் அதனை பெரிதாக நினைக்கவில்லை. குழந்தை கிடைத்து 3 நாட்களில் வீட்டின் கினற்றில் குதித்து விட்டார். தற்போது மகளை இங்கு சிசிச்சைக்கு அழைத்து வந்து சிலநாட்கள்தான் ஆகின்றன' என்று அவர் மிகவும் சோர்ந்த குரலில் எம்மிடம் கூறினார்.
அந்தப்பிரிவுக்கு பொறுப்பான தாதியிடம் கதைத்த போது, 'குறிப்பாக கர்ப்பகாலத்தில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மாமியார் மருமகள் பிரச்சினை, கணவனுடன் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படும் மனஅழுத்ததால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் குழந்தை மீது விருப்பமில்லாமல் செல்லல் குழந்தையை கொலை செய்யமுயற்சித்தல், தற்கொலை செய்ய முயற்சித்தல் போன்ற அசாதாரண நிலைக்கு இவர்கள் ஆளாகின்றனர்.
அவர்கள் இங்கு வந்த பின்னர் நாம் அவர்களது மனோநிலையை தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம.; குழந்தைகளை வெறுக்கும் தாய்மார்களாக இருந்தால் குழந்தையையும் தாயையும் பிரித்து வைக்கின்றோம். அவர்களுக்கு சிகிச்சை அழிக்கப்பட்ட பின்னர் குழந்தையும் தாயையும் ஒன்றாக சேர்த்துவிடுவோம்' என்றார்.
ஓர் அறையில் உள்ள பெண்ணைக்காட்டி, 'இங்கே பாருங்கள் இவரை. இவர் நீதிமன்றத்தால் அனுப்பட்டவர், இவர் ஒரு கர்ப்பிணித்தாய். ஆனால் யார் மூலம் இவள் கருவுற்றாள் என்பதை அவளாலேயே உணர்ந்து கொள்ள முடியாது. அவளது மாதவிலக்கு சுழற்சிபற்றி கூட அவளாள் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றாள். அவளுக்கு அந்தக் குழந்தை பற்றிய எந்தத் தேவையுமில்லை. அவளுக்கு சில நாட்களாக நாங்கள் சிகிச்சையளித்து வருகின்றோம்' என்றார் அந்த தாதி.
சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு அழகிய பகுதிக்குள் நாம் நூழைந்தோம அங்கு ஒரே முகத்தோற்றத்தை உடைய சில சிறுவர்கள் இருந்தனர். எம்மை இன்முகத்தோடு வரவேற்ற தாதியொருவர், 'இது விசேட தேவையுடையோருக்கான பகுதி. இதில் மூளை வளர்ச்சி குறைந்த சில சிறுவர்கள் இருக்கின்றார்கள். இங்கு நாம் அவர்களை ஒரு மாதம் அளவு பயிற்சிப்போம். அதனூடான அவர்களது அன்றாட செயற்பாடுகளை நெறிப்படுத்தவே நாங்கள் முயற்சிக்கின்றோம்' என்றார்.
நாங்கள் அங்கு இருந்த ஒரு சிறுவனை புகைப்படம் எடுத்த போது உரத்துச் சிரிப்பதனுடாக அவனது மகிழ்ச்சியின் உணர்வை எம்மோடு அவன் பரிமாறிக் கொண்டான்.
'எங்களுக்கு என்ன கொண்டுவந்தீர்கள்?'என்று கடுகடுத்த குரலுடன் தலையில் காயத்துடன் ஒரு சிறுவன் வந்தான். அப்போது அந்த தாதி 'இந்தச்சிறுவன் தன்பால் பிறது கவனத்தை ஈர்க்க கடுமையாகவும் அதிகாரமாகவும் செயற்படுவான். பொருட்களை போட்டு உடைப்பான். பிறருக்கு அடிப்பான். இது தான் அவனுக்குள்ள பிரச்சினை. இவனை இதில் இருந்து விடுவிக்க நாம் சில பயிற்சிகளை வழங்குகின்றோம.; இதனுடாக காலவோட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்' என்றார்.
நாங்கள் அங்கு இருந்த ஒரு சிறுவனை புகைப்படம் எடுத்த போது உரத்துச் சிரிப்பதனுடாக அவனது மகிழ்ச்சியின் உணர்வை எம்மோடு அவன் பரிமாறிக் கொண்டான்.
'எங்களுக்கு என்ன கொண்டுவந்தீர்கள்?'என்று கடுகடுத்த குரலுடன் தலையில் காயத்துடன் ஒரு சிறுவன் வந்தான். அப்போது அந்த தாதி 'இந்தச்சிறுவன் தன்பால் பிறது கவனத்தை ஈர்க்க கடுமையாகவும் அதிகாரமாகவும் செயற்படுவான். பொருட்களை போட்டு உடைப்பான். பிறருக்கு அடிப்பான். இது தான் அவனுக்குள்ள பிரச்சினை. இவனை இதில் இருந்து விடுவிக்க நாம் சில பயிற்சிகளை வழங்குகின்றோம.; இதனுடாக காலவோட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்' என்றார்.
வயோதிப உளவியல் நோயாளர்களை பராமரிக்கும் பகுதியில் வயோதிபர்கள் அவர்களது உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து மிகவும் அன்புடன் அவர்களை ஆண், பெண் தாதியர்கள் பராமறிப்பதை எம்மால் காணக் கூடியதாக இருந்தது.
அழகிய வித்தியாசமான கலைத்துவம் மிக்க ஓவியங்கள் அடங்கிய ஒரு பகுதிக்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். வித்தியாசமான வர்ணக்கலவை, மிகவும் வித்தியாசமான உருவங்கள் அடங்கிய ஓவியங்கள் அந்தப்பகுதியில் உள்ள சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன. இந்தப்குதிக்கு பொறுப்பான அதிகாரி எம்மோடு உரையாடியபோது 'தொழில் பயிற்சி சிகிச்சைப்பிரிவு இதிலே பல பிரிவுகள் உள்ளன. குறிப்பாக கைப்பணி, தையல், சமையல், சித்திரம், கணினிப் பயிற்சி, விவசாயம் என பல்வேறுபட்ட பகுதிகள் உள்ளடங்குகின்றன இப்பகுதியூடாக நாம் பல மாற்றங்களை நோயாளிகளிடம் இருந்து கொண்டுவர முயற்சிக்கின்றோம்' என்றார்.
'உண்மையில் நல்ல பல மாற்றங்களைக் கண்டுள்ளோம். இந்த ஓவியங்களைப் பாருங்கள். இவை அனைத்தும் எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற, பெறுகின்ற நோயாளிகள் வரைந்தவை தான். எவ்வளவு வித்தியாசமாக உள்ளனவென்று பார்த்தீர்கள் தானே எமது வைத்தியசாலையில் சிறந்த ஓவியர்கள் 10 பேர் இருக்கின்றனர். இவர்களின் ஓவியங்களைப் பார்த்தால் யாரும் அவர்களை மனநோயாளிகள் என்று சொல்லமாட்டார்கள்.
'உண்மையில் நல்ல பல மாற்றங்களைக் கண்டுள்ளோம். இந்த ஓவியங்களைப் பாருங்கள். இவை அனைத்தும் எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற, பெறுகின்ற நோயாளிகள் வரைந்தவை தான். எவ்வளவு வித்தியாசமாக உள்ளனவென்று பார்த்தீர்கள் தானே எமது வைத்தியசாலையில் சிறந்த ஓவியர்கள் 10 பேர் இருக்கின்றனர். இவர்களின் ஓவியங்களைப் பார்த்தால் யாரும் அவர்களை மனநோயாளிகள் என்று சொல்லமாட்டார்கள்.
சில நோயாளிகள் தமது பிரச்சினையை பேசமாட்டார்கள.; அவர்களிடம் வரைய சொன்னால் தமது உணர்வுகளை மிக அருமையாக வரைவார்கள.;படங்களை வைத்துக் கொண்டு நாம் அவர்களோடு உரையாடுவோம். அவர்களின் பிரச்சினைகளை அதனூடாக நாங்கள் இனங்கண்டு கொள்வோம்.
சிலர் பொழுது போக்குகாக வரைவரார்கள், ஓவியத்துiற சார்ந்தவர்கள் இங்கு சிகிச்சைக்கு வருவார்கள், அவர்களும் வரைவார்கள். நாம் இந்த ஓவியங்களை கொண்டு ஓவியக் கண்காட்சிகளை நடத்துவோம் இதன்போது இவர்களுக்கு சமூகத்தில் உளவியல் நோயாளிகள் என்ற பெயர் மாறி ஓவியர்கள் என்ற ஒரு பெயர் கிடைக்கின்றது. இதன்போது இவர்களுக்கான சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தப்படுகின்றது.
இவர்களின் படைப்புகள் மிக அருமையானவை. இதோ பாருங்கள் இந்த ஓவியத்தை . இது ஒரு ஸ்கிட்ஸோப்ரீனியா (எண்ணம், செயல், ஆகியவை மாறுபட்டு செயற்படும் உளவியல் கோளாறு) என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் வரைந்த ஓவியம் இது' என்று ஒரு படத்தைக் காட்டினார் அந்த அதிகாரி.
'இவ்வாறான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சாதாரணமான உணர்வுகளைத்தான்டி அவர்களது மூளை பல புதிய உணர்வுகளை சத்தங்களை உணரும் இதனால் அவர்களிடமிருந்து வெளிப்படும் ஓவியங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
நாம் இந்தப்பகுதியில் ஒவியங்களை தான்டி பல்வேறுபட்ட தொழில்சார் பயிற்றுவிப்புளை செய்து வருகி;ன்றோம். இந்த வைத்தியசலையில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது அனுமதி கட்டம், அதாவது ஆரம்பக்கட்டம். நோயாளர்களை அனுமதித்து அவர்களுக்கான மருத்துவ ரீதியான சிகிச்சைகள் வழங்கி சில வாரங்கள் அனுமதி விடுதிகளில் (வார்ட்) வைத்து சிகிச்சை வழங்கப்படும்.
இரண்டாம் கட்ட விடுதிகளுக்கு மாற்றப்பட்டபின்ர் மருத்துவ சிகிச்சையுடன் தொழில் சிகிச்சைப்பிரிவிலும் அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டுகிறது. இரண்டாம் கட்டப் படிநிலையுடன் 95மூ மான நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேறுகின்றனர். அதில் 5மூ ஆனவர்கள் சில நேரங்களில் நிரந்தர நோயாளர்களாக வைத்தியசாலையில் தங்கவேண்டி ஏற்படுகிறது. அவர்களை பராமரிக்க யாரும் இல்லாத நிலையிலே அவர்கள் இங்கு தங்கியிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
'உடலில் ஏற்படுகின்ற எல்லா நோய்களையும் போன்று உளவியல் நோயும் உடலில் ஏற்படும் இரசாயண மாற்றங்களாலேயே உருவாகின்றன. ஆனால் ஏனைய நோய்களைப் போல் அல்லாமல் உடலியல் மாற்றங்களோடு செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதனாலேயே இதனை சமூகம் வித்தியாசமாக நோக்குகின்றது.
அதே நேரம் மக்கள் மத்தியில் இன்னும் பேய், பிசாசு பிடிக்கின்றது என்ற நிலையில் பார்க்கின்ற நிலை உள்ளது இப்பார்வையில் மாற்றங்கள் வரவேண்டும் மக்கள் உளவியல் நோய்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் இவ்வாறான நோய்நிலைகளின் ஆரம்பத்தைக்கண்டால் மக்கள் உடனடியாக நாடளாவிய ரீதியில் உள்ள பயிற்றப்பட்ட உளவியல் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும.;அல்லாமல் பெரியளவில் இந்நோய் பாதிக்கப்படும் வரையில் பார்த்துக் கொண்டிருந்து சங்கடமான நிலைகளுக்கு உள்ளாகக் கூடாதென இவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜயான் மென்டிஸ் தெரிவித்தார்.
உண்மையில் இந்த இயந்திர உலகில் நால்வரில் ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. இவ்வாறான பாதிப்புக்கள் கடுமையான நிலையை அடைவதற்கு முன்னர் நாம் உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளையும் அவர்களது தேவைகளையும் சரியாக புரிந்து கொள்வதோடு அவர்களை சமூக்கட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களையும் மனிதர்களாக பார்த்து அவர்களின் மாற்றுத்திறமைகளை சாதனைகளாக மாற்ற கரம் கொடுக்கப்பட வேண்டும்.








0 Comments