Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று : ஜனவரி 30

1648 : நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.

1649 : இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டார்;

1649 : இரண்டாம் சார்ள்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை மன்னனாக அங்கீகரிக்கவில்லை.

1820 : எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அந்தார்;டிக்காவில் தரையிறங்கினார்.

1835 : ஐக்கிய அமெரிக்கக் ஜனாதிபதி அண்ட்ரூ ஜக்ஸன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.

1889 : ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1933 : அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (சான்ஸ்லர்) பதவியேற்றார்.

1943 : இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் ஜேர்மன் அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த சுமார் 9,500 பேர் கொல்லப்பட்டனர்.

1948 : மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் டில்லியில் படுகொலை செய்யப்பட்டார்.

1956:  அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த மார்ட்டின் லூதர் கிங்கின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.

1959: டைட்டானிக் போன்றே மூழ்கடிக்கப்பட முடியாத கப்பல் என கருதப்பட்ட ஹான்ஸ் டெஹடோவ்ட் எனும் கப்பலும் தனது முதல் பயணத்தில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. அதில் பயணம் செய்த 95 பேரும் உயிரிழந்தனர்.

1964 : ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

1964 : தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான், இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1972 : வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1972 : பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான்  விலகியது.

1994 : பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

2000 : கென்யாவின் விமானம் ஒன்று அத்திலாந்திக்; கடலில் ஐவரி கோஸ்ட் அருகில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.

2003 : ஒருபாலினத் திருமணத்தை பெல்ஜியம்  சட்டபூர்வமாக்கியது.

Post a Comment

0 Comments