Subscribe Us

பொலிஸ் வாகனம் மோதியதில் மூவர் பலி

(TM)
புத்தளம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் வாகனம் மோதியமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி, செம்பட்டை எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அத்தியட்சகரின் வாகனமும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மங்களஎளிய மரிச்சிக்கட்டு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிரிமால் மதுசங்க, அகில மதுஷான் மற்றும் திலான் மதுசங்க ஆகிய இளைஞர்கள் மூவரே உயிரிழந்தவர்களாவர்.

Post a Comment

0 Comments