Subscribe Us

header ads

விஷமற்ற உணவை இலங்கை மக்களுக்கு வழங்கும் தருணம் வந்துவிட்டது - ஜனாதிபதி

(AD)
விஷமற்ற தேசிய உணவு வேளையை இலங்கை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு நாட்டில் அனைத்து விவசாயிகளின் அர்ப்பணிப்பு அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு சிறி சம்போதி விகாரை ஆரம்பித்துள்ள விஷமற்ற உணவு மத்திய நிலையத்தை (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஞாயிறன்றும் திறந்திருக்கும் இந்த உணவு மத்திய நிலையத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து உணவுகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதோடு, தொற்றாத நோய்கள் குறித்த நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments