Subscribe Us

மதுபான உற்பத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கும்பல்! அம்பலப்படுத்தும் பிணாமிகள்

இது தொடர்பில் தற்போது முரண்பாடுகள் வெடித்துள்ளதாக தகவல் கசித்துள்ளன.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான லக்ஸ்மன் வசந்த பெரேராவிற்கும், ஜனாதிபதி மஹிந்தராஜபக்‌ஷவிற்கும் இடையிலான முரண்பாடுகள் வலுத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது.

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பிரத்தியேகமாக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் இடத்தில் பிரதியமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா இடம்பெற்றிருந்தார்.

சட்டத்தரணி லக்ஸ்மன் வசந்த பெரோ, மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த மதுபான உற்பத்தியானது உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக அதிகாரிகள் இதற்கு முன்னர் பல மதுபான உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டிருந்த போதிலும், மஹிந்தவின் அழுத்தங்கள் காரணமாக அவை குறித்து விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இதற்குப் பிரதியுபகாரணமாக நாமல் ராஜபக்ஷவின் "இளைஞர்களுக்கான எதிர்காலம்'' என்ற அமைப்பின் பெயரில் நாடு முழுவதும் 600 நீச்சல் தடாகங்களை நிர்மாணித்துத் தருவதாக பிரதியமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரோ உறுதி வழங்கியுள்ளார்.

எனினும், இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் ஆத்திரமடைந்துள்ள மஹிந்த தரப்பினர் பிரதியமைச்சருடன் முரண்பட்டுள்ளனர்.

அத்துடன், மஹிந்த ராஜபக்‌சவிற்கு சார்பான சில ஊடகவியலாளர்களை அழைத்து, பிரதியமைச்சர் லக்ஸ்மன் வசந்தவிற்கெதிராக செய்திகளை வெளியிடுமாறு பணித்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருக்கிய நண்பரான லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், ரஞ்சித் ஆனந்த ஜயசிங்க, லங்காதீப ஞாயிறு வார வெளியீட்டில் கடந்த வாரம் ''மதுபான உற்பத்தியில் அரசியல்வாதிகள்'' என்ற தலைமைப்பில் பிரதான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், பிரதியமைச்சருக்கெதிராக நேரடியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதிலுள்ள மகிந்த ராஜபக்‌ஷவின் இந்த செயல்பாடுகள், பிரதியமைச்சர் லக்ஸ்மன் வசந்தவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக ஆளும் கட்சி செய்திகள் கூறுகின்றன.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன் கம்பனி தற்போது, மதுபான உற்பத்தியில் தீவிர நாட்டம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments