Subscribe Us

இறால் பண்ணையில் இயந்திரங்களை திருடிய மூவர் கைது

(TM)
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையொன்றிலிருந்து விலையுயர்ந்த 20 இயந்திரங்களை திருடியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து வெளிநாட்டுக் கைக்குண்டொன்றுடனும் முச்சக்கரவண்டியொன்றுடனும் திருடப்பட்ட 08 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களையும் 12 காற்றாடி இயந்திரங்களையும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள இயந்திரங்களின் பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபாவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக முந்தல் பிரதேசத்தில் பாரிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments