Subscribe Us

ரஷ்யாவில் செழித்தோங்கும் ஹலால் தொழில் துறைகள்

(A.J.M மக்தூம்)
ரஷ்யாவில் ஹலால் உணவின் தேவைப்பாடு அதிகரித்து வருவதன் நிமித்தம், அங்கே ஹலால் தொழில் துறைகள் அதிகரித்து வருவதால் ஹலால் சந்தை ஒரு ஒளிமயமான எதிகாலத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப் படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப் படும் ஹலால் பொருட்களை முறையாக பகுப்பாய்வு செய்து, அதற்கு ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் அதிகளவிலான முஸ்லிம்கள் முன்னின்று அதற்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் சேவையை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹலால் தொழில் துறைகள் சர்வதேச மட்டத்தில் ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது, எனினும், அத்தொழில் துறைகளை மேலும் மேம்படுத்த பங்குதாரர்கள், உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் ஒற்றுமையாக செயல்படுவதோடு, சரவதேச மட்டத்தில் ஒரு தனி அமைப்பு குறித்த ஹலால் தொழில் துறைகளை நிர்வகிப்பதும் அவசியமாகும் என தெரிவிக்கப் படுகிறது.
ரஷ்யாவில் ஹலால் தொழில் துறைகள் பாரிய அளவில் அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஆண்டு தோறும் நாம் 40 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு, வெவ்வேறு கோணங்களில் ஹலால் சான்றிதழ் வழங்கி வருகிறோம் என ரஷ்யா பத்வா சபையின் கீழ் இயங்கும் பொருளாதார துறை இயக்குனர் மதீனா கலீமுல்லாஹ் கலீஜ் டைம்சுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் பெரும் அளவிலான முஸ்லிம் அல்லாத நுகர்வோரும் ஹலால் உணவின் சுகாதார தன்மையின் காரணமாக அதனை தெரிவு செய்வதாக அவர் மேலும் அதன் போது குறிப்பிட்டமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments