ஜேர்மனியிலுள்ள உயர்ரக பெஷன் உற்பத்திகளை மேற்கொள்ளும் போல்கி நிறுவனம் உலகின் பெறுமதிவாய்ந்த காலுறையை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் 10 ஜோடி காலுறைகள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.
பெரு நாட்டின் தேசிய விலங்கான விகுனா எனப்படும் ஒரு வகை ஒட்டகத்தின் உரோமத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த காலுறை ஜோடி ஒன்றின் பெறுமதி காலுறைக்கு இவ்வளது தொகையான என அதிர்ச்சியளிக்கும் விதமாக 1200 அமெரிக்க டொலர்கள் (சுமார் 157,000 ரூபா) என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கமைவாக மேற்கொள்ளப்படும் இந்த அரிய வகை காலுறை கோல்டன் பிரவுண் நிறத்தில் மட்டும் விற்கப்படவுள்ளது. இது உலகின் அதி விலைகூடிய காலுறை எனக் கூறப்படுகின்றது.


0 Comments