Subscribe Us

சின்னகுடியிருப்பு கூட்டுறவு சங்க நிர்வாக சபை தெரிவு

பஷீர் M. அர்ஷத்

 சின்னகுடியிருப்பு கூட்டுறவு சங்க நிர்வாக சபை தெரிவு 19.12.2013 வியாழக்கிழமை அன்று சின்னகுடியிருப்பு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இடம்பெற்றது. அதில் கற்பிட்டி கூட்டுறவு சங்க செயலாளர், முகாமையாளர் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான பஷீர், அன்பஸ், அப்துல்லாஹ் ஷாப், குமார், அலிசப்ரி, இன்பாஸ், சுகைப் ஆசிரியர், அலிகான் ஆகியோர் கலந்து கொன்டதோடு ஹியூமன் குறித்த கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை.


             மாலை 3 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் செயலாளராக சுகைப் (நௌசாத்) ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக அலிகான் அவர்களும், உபதலைவராக ஹியூமன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், சங்கத்தின் எதிர்காலம் குறித்த ஆக்கபூர்வமான சில விடயங்களும் கலந்துரையாடப்ப்ட்டதுடன் சுமார் 4 மணியளவில் கூட்டம் முடிவுக்கு வந்தது.

Post a Comment

0 Comments