Subscribe Us

க.பொ.த. சா/த. பரீட்சை மாணவர் நலன் கருதி ஒரே நாளில் அடையாள அட்டை வழங்கல்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ, மாணவிகளின் வசதிக்காக நாளை 7 ஆம்திகதி ஒரே நாளில் அடையாள அட்டை வழங்கும் சேவையொன்றை நடாத்தவுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதுவரைஅடையாள அட்டை பெறாத மாணவர்கள் இந்த ஒரு நாள் சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் காலை 8.30 முதல் மாலை 4.00 மணிவரை திறந்திருக்கும். மணவர்களது விண்ணப்பப் படிவங்களை மாணவனது பெற்றோர் அல்லது பாடசாலை அதிபர் சமர்ப்பித்து மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments