Subscribe Us

header ads

பாடசாலை அதிபர் பிணையில் விடுதலை

புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் அதிபர் சுமனசிரி அமரசிங்க நேற்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பழைய மேசைகள் மற்றும் கதிரைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த அதிபர் புத்தளம் பதில் நீதவான் எம்.ஏ.பசால் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரை ஜனவரி மாதம் 8ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தல் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார். 

Post a Comment

0 Comments