Subscribe Us

வெளிநாட்டு கைக்குண்டுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

புத்தளம் - முந்தல், புளிச்சகுளம் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது சந்தேகநபர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (24) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

(அத தெரண )

Post a Comment

0 Comments