Subscribe Us

95 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால்
பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 55 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நேற்று நிறைவு பெற்றதை அடுத்து இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

Post a Comment

0 Comments