நுரைச்சோலை அனல்மின் நிலையம் அடிக்கடி செயலிழந்ததன் காரணமாக, 920 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கத்தின் ஆலோசகர் பந்துல சந்ரசேகர கூறுகிறார்.
அந்த அனல்மின் நிலையம் செயலிழந்தன் காரணமாக நாளொன்றிற்கு 72 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் கடந்த 13ம் திகதி தொடக்கம் மீண்டும் செயலிழந்துள்ளதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் திருத்தப் பணிகள் காரணமாகவே நுரைச்சோலை அனல்
மின்நிலையத்தின் தொழிற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக
பொறியிலாளர் செனுஜித் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நன்றி: PTPV

0 Comments