ரபி பாடசாலையில் தங்கிப் படித்து வரும் 6 வயது சிறுவனுக்கு இஸ்திரிப் பெட்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்ததாக, அப் பாடசாலையின் நிர்வாகி முகமது ஷேக் பரீத் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் கே.என்.பி. காலனி 3 ஆவது வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (36). பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி ஜாஸ்மின் (24). இவர்களுடைய குழந்தைகள் இப்ராஹீம் (6), முகமது பாரூக் (5), பர்ஷானா (3).
கடந்த ஒரு மாதத்திற்கு முன், மங்கலம் அருகே அக்ஹாரபுதூரில் உள்ள அரபி பாடசாலையில் தங்கிப் படிப்பதற்காக இப்ராஹீம் சேர்க்கப்பட்டார். ஜாஸ்மின் சகோதரியின் இரு குழந்தைகளும் அங்கு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜாஸ்மின் சகோதரியின் கணவர் ஜாகீர் உசேன், திங்கள்கிழமை அரபி பாடசாலைக்கு சென்றார். அங்கு இப்ராஹீமை பார்க்க அவருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், இப்ராஹீமை அழைத்து வந்து காண்பித்தனர்.
அப்போது இப்ராஹீமின் தலை, கண், முதுகு, மர்ம உறுப்பு உள்பட உடலின் பல பகுதிகளிலும் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்ட தழும்பும், காயங்களும் காணப்பட்டன.
உடனே, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்ராஹீம், பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, மங்கலம் போலீஸில் ஜாகீர் உசேன் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக பாடசாலை நிர்வாகி முகமது ஷேக் பரீத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இப்ராஹீம் அதிகாலை 5 மணிக்கு எழாமல் இருப்பதாகவும், குறும்பு செய்வதாலும் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

0 Comments