Subscribe Us

தரம் 5க்கான கணிதம், ஆங்கில பாடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் சித்தியடையத் தவறினர்

இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த
 
அடிப்படையிலான பாடசாலை ஆசிரியர்கள் வினைத்திறன் தடைகாண் பரீட்சையில் சித்தியடையவில்லை என அரசாங்க செயலாளர் அம்ரஜீட் ஸின்ஹா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் குறைவாக உள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டமையைடுத்து கடந்த மாதம் நடாத்தப்பட்ட பரீட்சை முடிவே இவ்வாறு அமைந்துள்ளது.
 
இது குறித்து அம்ரஜீட் கூறுகையில், வினைத்திறன் தடைகாண் பரீட்சையில் 24 சதவீதமானவர்கள் சித்தியடையவில்லை. பரீட்சைக்கு தோற்றிய 43,447 பரீட்சார்த்திகளில் 32,833 பேர் சித்தியடைந்துள்ளர் எனத் தெரிவித்துள்ளார்.
 
இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால் இப்பரீட்சையில் 5ஆம் தரம் வரையிலான பொதுச்சாதரண விடங்யங்கள், கணிதம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களிலேயே நடத்தப்பட்டுள்ளது.
 
முதற் தடவை சித்தியடையாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அவர்கள் இரண்டாவது தடவையும் சித்தியடைவில்லையெனில் அரச விதிமுறைகளின்படி அவர்களது வேலையை இழக்கலாம் எனவும் ஸின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments