Subscribe Us

header ads

2013ம் ஆண்டுக்கான ஐ.நா மனித உரிமைகள் விருது மலாலாவுக்கு அறிவிப்பு

 ஐ.நாவின் 2013ம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான விருது பாகிஸ்தானில் பெண் சிறார்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் மாலாலா யூசப்சைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஐ.நாவால் வழங்கப்படும் மிக உயரிய விருது இது. மலாலா யூசப்சை, பாகிஸ்தானில் தான் வசித்து வந்த தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தக்காக்கில் பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்து சர்வதேச ஊடக கவனத்தை இவ்விவகாரம் குறித்து திசை திருப்பினார். எச்சரித்தது படியே தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவம் பார்க்கப்பட்டவர்.
 
தற்போது தனது காயத்திலிருந்து முற்றாக குணமடைந்து இங்கிலாந்திலேயே தனது கல்வியை தொடர்கின்ற போதும், பெண்பிள்ளைகளின் கல்வி உரிமைக்காகவும், சிறார்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் மலாலா. ஏற்கனவே மலாலா தினம் என சர்வதேச தினம் ஒன்றையே அறிவித்திருந்த ஐ.நா தற்போது மனித உரிமைகளுக்கான 2013ம் ஆண்டுக்கான விருதை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
 
அடிமைகளின் விடுதலைக்காகப் போராடிய மொரிதானியாவைச் சேர்ந்த பிரம் டா அபீட், அடித்தட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் கொசோவாவைச் சேர்ந்த ஹில்ஜிமினிஜேதா அபுக் ஆகியோருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் விருது முன்னர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்லாந்தைச் சேர்ந்த உலக காது கேளாதோர் அமைப்பின் தலைவர் லீசா காப்பியன், மொராக்கோவின் மனித உரிமைகள் கூட்டமைப்பின் முன்னாள் அதிபர் காடிஜா ரியாடி ஆகியோருக்கும், தென் ஆபிரிக்காவின் மறைந்த அதிபர் நெல்சன் மண்டேலா, ஆகியோருக்கும் இவ்விருது கிடைத்துள்ளது. கடந்த முறை சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
 
இப்பரிசு மனித உரிமை தொடர்பில் சேவையாற்றியவர்ளுக்கு கவுரவப்படுத்துவதற்காக மட்டும் வழங்கப்படவில்லை என்றும், உலகளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு தந்து வருவதை சுட்டிக்காட்டுவதற்காகவும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 10-ந்தேதி மனித உரிமையின் நூற்றாண்டு நாள் விழாவின் போது வழங்கப்படும் என்று தெரிகின்றது.

Post a Comment

0 Comments