இதுதொடரபான வாக்கெடுப்புகள் தற்பொழுது பாரிசில் நடந்து வருகிறது, இன்னும் 2
அல்லது 3 மணித்தியாலங்களில் எந்த நாட்ட்டுக்குக் கிடைக்கும் என இறுதி
முடிவு அறிவிக்கப்படவுள்ளதுடன் துபாய்க்கே கிடைக்கும் என பல நாடுகள்
எதிர்பாரக்கின்றன.
துபாய் அரசாங்கத்திற்கு போட்டியாக தங்கள் நாட்டில்தான் நடத்தவேண்டுமென
கோரிக்கை வைத்து இறுதி முடிவினை பி.ஐ.இ யிடமிருந்து தற்பொழுது
எதிர்பார்த்து காத்திருக்கும் மற்ற முன்னணி நாடுகள் ரஸ்யா, பிரேசில்
மற்றும் துருக்கி மட்டுமே.
எக்ஸ்போ விழாவினை துபாயில் நடாத்த 23 இஸ்லாமிய நாடுகளின் ஆதரவினை துபாய்
அரசாங்கம் ஏற்கனவே பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.
மீதமுள்ள 57 இஸ்லாமிய
நாடுகளின் ஆதரவினைப் பெற துபாய் மற்றும் துருக்கி - இரு இஸ்லாமிய
அரசாங்கங்களும் கடுமையாக முயற்சித்து வருகின்றன.
அப்படி எக்ஸ்போ 2020 துபாயில் நடைபெற்றால், உலகில் அமீரகத்தின் கேந்திர
வியாபார முக்கியத்துவம் பல கோடி மில்லியன்களால் இன்னும் அதிகரிக்கும்
வாய்ப்புள்ளது.
பல்லாயிரக்கணக்கனோருக்கு வேலைவாயப்புக்கிட்டுவதுடன் இரண்டு மடங்கு சம்பள
உயர்வுகளும் கிடைக்கும்.




0 Comments