Subscribe Us

புனித மக்காஹ் பள்ளிவாசல் (படங்கள் இணைப்பு)

(சவுதியிலிருந்து ஏ.எச்.எம் இல்தாப் )

மக்கா (அரபு மொழி: مكّة المكرمة) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும் குறுக்கமான பள்ளத்தாக்கு ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 மீட்டர் 910 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இஸ்லாமியர்களது வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

நபிகள் நாயகம் அவர்கள் இந்நகரிலேயே பிறந்தார்கள், புனித அல்குர்ஆன் முதலாவது இந்நகரிலேயே அருளப்பட்டது(குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீற்றர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது) . 

இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான மஸ்ஜித் அல் ஹராம் (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

 வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது.மக்கா புனித கஹ்பாவின்(Kaaba) வீடு,முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதஸ்தளங்கள் காணப்படுகின்றன. மக்கா,ஷரீப் என அழைக்கப்படும் நபிகள் நாயகத்தின் வழித்தோண்றல்களால் மிக நீண்டகாலமாக ஆட்சிசெய்யப்பட்டு வந்ததுடன்,அவர்கள் சுதந்திர ஆட்சியாளர்களாக செயற்பட்டுவந்தனர்.

இவ் ஆட்சிமுறை 1925இல் சவுதி அரேபியாவின் உருவாக்கத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.தற்காலத்தில், மக்காவின் உள்கட்டமைப்பு மிகப்பிரமாண்ட அளவில் விரிவாக்கப்பட்டு காணப்படுகின்றது.இந்த விரிவாக்கத்தின் காரணமாக மக்கா,அஜ்வத் கோட்டை போன்ற சில வரலாற்றுக் கட்டமைப்புகளையும்,தொல்லியல் தளங்களையும் இழந்துள்ளது.

இன்று,வருடாந்தம் ஹஜ்ஜுடைய காலங்கள் உட்பட ஏறத்தாள 15மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவுக்கு செல்கின்றனர்.இதன்விளைவாக மக்கா,முஸ்லிம் உலகின் மிகவும் பரந்தநோக்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.











Post a Comment

0 Comments