Subscribe Us

‘மங்கள்யான்’ செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் ஏவியது இந்தியா

செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? என்பதை உறுதி செய் வதற்காக இந்திய விண்வெளி ஆரா ய்ச்சி நிறுவனம் ரூ. 450 கோடி செல வில் 'மங்கள்யான்' எனும் விண்கல த்தை தயாரித்தது. இந்த விண்கலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான 56 1/2 மணி நேர கவுண்ட் டவுன் 3ம்திகதி அதிகாலையில் 6.08 மணிக்கு தொடங்கியது.


அதன் தொடர்ச்சியாக மங்கள்யானில் இறுதிக்கட்ட இணைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. மங்கள்யானை சுமந்து செல்லும் 45 மீற்றர் நீளமுள்ள பி. எஸ். எல். வீ. ரொக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த ரொக்கெட் 76 மீட்டர் நீளமுள்ள நகரும் கோபுரம் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நகரும் கோபுரம் ரொக்கெட்டை ஏவுதளத்தில் நிலை நிறுத்தி, செயற்கை கோள் விண்ணில் செலுத்துவதற்கு முழு அளவில் தயார் நிலையில் இருந்தது.

கவுண்ட் டவுன் முடிந்து சரியாக நேற்று பிற்பகல் 2.38 மணிக்கு பி. எஸ். எஸ். வி. ரொக்கெட் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய செயற்கை கோள் இதுவாகும். இந்தச் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைவதற்கு 9 மாதம் ஆகும். அதன்பிறகு அனைத்து கோணத்திலம் செவ்வாய் கிரகத்தை புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் அத்துடன், அங்குள்ள சீதோஷ்ண நிலை, உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது பற்றிய தகவல்களை அனுப்பும் இந்த செயற்கை கோளின் ஆய்வுப் பணிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் பெங்களூர் அருகே உள்ள பயலாலு ஆய்வு மையத்திற்கு வந்து சேரும்.

Post a Comment

0 Comments