Subscribe Us

இந்த டீலிங் நல்லாயிருக்கே.. விடைத்தாளுடன் வெளியான வினாப்பத்திரம்

மேல் மாகாணத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆண்டிறுதிப் பரீட்சையில் தமிழ் மொழிமூல தரம் 9 க்கான வரலாறு பாட வினாப் பத்திரத்துடன் அவ்வினாப்பத்திரத்துக்கான விடைகளும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த வினாப்பத்திரத்தின் ஐந்தாவது வினாவுக்குப் பின்னரே இந்த விடைகள் அச்சிடப்பட்டுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.

மாணவர்களுக்கு வினாப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு அவர்கள் அதிலுள்ள வினாக்களுக்கான விடைகளை எழுதிக்கொண்டிருந்த போது வலயக் கல்விப் பிரிவு அதிகாரிகளால் அவ்வினாப்பத்திரங்கள் மீண்டும் பெறப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments