Subscribe Us

கொழும்பு – சென்னை விமான சேவையை இடைநிறுத்துகின்றது ஜெட் எயர்வேய்ஸ்

கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவையை நிறுத்த இந்தியாவில் ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 
 
எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியுடன் கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக, ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
அதற்குப் பிந்திய நாட்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். 
 
சென்னை- கொழும்பு இடையில், குறைந்த கட்டண விமான சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது. இந்நிலையில் போதிய இலாபமின்மையை காரணம் காட்டி இந்த சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments