(வீரகேசரி)
தமக்குரிய பாடசாலைக் கட்டிடங்கள்
தேவையெனக் கோரிக்கை விடுத்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை
மாணவர்களும் பெற்றோர்களும் இன்று கறுப்புக் கொடியை ஏந்தியவாறு
நுவரெலியா-அட்டன் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேல் கொத்மலை திட்டத்தின் மூலம் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 9 கட்டிடங்கள் தருவாதாகக் கூறி
போதிலும் தற்போது 3 கட்டிடங்களை மாத்திரமே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
வழங்கியுள்ளனர்.
தற்போது கட்டிக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடம் பாடசாலைக்கென கூறி அது
வேறொரு குழுவிடம் அக்கட்டிடம் கைமாற்றப்படவுள்ளதாகவும், தற்போது
பாடசாலைக்கு இருக்கின்ற வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் பாடசாலை
மாணவர்களும் பெற்றோர்களும் இன்று கறுப்புக் கொடியை ஏந்தியவாறு நுவரெலியா
அட்டன் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.
அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மிகுதி 6
கட்டிடங்கள் எங்கே என்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








0 Comments