உலகின் முதல் நிலை கோல்வ் வீரரான டைகர் வூட்ஸ், ஐரோப்பிய கண்டத்திலிருந்து அடித்த கோல்வ் பந்தொன்று ஆசிய கண்டத்துக்குள் வந்து விழுந்தது.
இது ஜோக் அல்ல. உண்மையாகவே நேற்று முன்தினம் ஐரோப்பிய கண்டத்திலிருந்து ஆசிய கண்டத்துக்கு பந்தை அடித்தார் டைகர் வூட்ஸ்.
ஐரோப்பாவுடனும் ஆசியாவுடனும் எல்லைகளைக் கொண்ட நாடாக துருக்கி
விளங்குகிறது. அங்குள்ள ''பொஸ்பரஸ் பாலம்'' இரு கண்டங்களையும் இணைக்கிறது. 1560 மீற்றர் நீளமான இப்பாலத்தின் ஐரோப்பிய பகுதியிலிருந்தே ஆசிய கண்டத்துப் பகுதிக்குள் கோல்வ் பந்தை அடித்தார் டைகர் வூட்ஸ்.
இன்று ஆரம்பமாகும் துருக்கி பகிரங்க கோல்வ் போட்டிகளுக்கான ஊக்குவிப்பாக இந்நிகழ்வு நடைபெற்றது. இதற்காக பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த விசேட கோல்வ் மேடையிலிருந்து டைகர் வூட்ஸ் பந்தை அடித்தார். மிகப் பரபரப்பான இப் பாலத்தின் ஒரு பகுதி, இந்நிகழ்வுக்காக 28 நிமிடங்கள் மூடப்பட்டிருந்தன.
37 வயதான டைகர் வூட்ஸ், துருக்கி பகிரங்க கோல்வ் போட்டிகளில்
பங்குபற்றுவதற்காக 30 லட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments