Subscribe Us

பிரபல கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் மாங்குளத்தில் கைது

இலங்கையின் பிரபல கவிஞரும் நடிகருமான வ. ஐ ச ஜெயபாலன் (69) 

 மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு வணக்கம் செலுத்த சென்றிருந்தவேளையில் அவர் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த அவர்  விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏராளமான கவிதைககளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு,  2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில்  நடித்தமைக்காக 2011 இந்திய தேசிய திரைப்படவிருது வழங்கல் விழாவில், விசேட விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மாங்குளத்தில்  இன்று கைது செய்யப்பட்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments