Subscribe Us

கல்முனை மேயர் சிராஸ் இராஜினாமா

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா  கடிதத்தினை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே தனது இராஜினாமா கடிதத்தினை அவர் கையளித்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments