1520: சுவீடன் மீது படையெடுத்த டென்மார்க் படையினர் ஸ்டொக்ஹோமில் சுமார் 100 பேரை கொலை செய்தனர்.1731: அமெரிக்காவின் முதலாவது நூலகத்தினை பிடடெல்பியாவில் பென்ஸமின் பிறங்லின் திறந்து வைத்தார்.
1864: அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் 2ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1884: 2ஆவது லியோபோல்ட் மன்னனின் கொங்கோவினை சுதந்திர மாநிலமாக ஜேர்மன் அரசாங்கம் அங்கீகரித்தது.
1895: ஜேர்மனியின் வில்ஹெல்ம் ரொண்ட்ஜன் என்பவரால் X-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
1923: ஜேர்மன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.
1932: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரிவானார். பின்னர் மேலும் 3 தடவைகள் இவர் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.
1939: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பினார்.
1950: கொரிய யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படையின் எவ்-80 ரக விமானத்தின் விமானி ரஸல் ஜே.பிரவுன், வடகொரியாவின் இரு மிக் 15 விமானங்களை சுட்டுவீழ்த்தினார். உலகில் விமானங்களுக்கிடையிலான நேரடி சமர் இதுவாகும்.
1963: எட்வர்ட் புரூக் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு முதல் தடவையாக கறுப்பினத்தவரானார்.
1987: இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை 7 ஓட்டங்களால் தோற்கடித்து உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
1988: சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் 900 பேர் உயிரிழப்பு
2004: ஈராக்கின் பலூஜா நகரின் மீது சுமார் 10 ஆயிரம் பேர்கொண்ட அமெரிக்க படை தாக்குதலை ஆரம்பித்தது.

0 Comments