(தொகுப்பு- கற்பிட்டியின் புதல்வன் Bazeer M Arshath.)
இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகள் 20ம் நூற்றாண்டிலிருந்தே தோற்றம் பெற தொடங்கின. ஏனெனில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வர்த்தகம் செய்வதிலேயே தம்மை ஈடுபடுத்த விரும்பினர். அதுமட்டுமின்றி அக்காலகட்டத்திலே நடைமுறையிலிருந்த ஆங்கிலகல்வியானது இஸ்லாமிய சமய, கலாசாரங்கட்கு முரணானவை என்ற கருத்து நிலவியமையும் முஸ்லிம்கள் கல்வி கற்பதிலே அதிகளவு ஆர்வம் காட்டாமைக்கு காரணமாகும்.
தொடர்ந்து ஆபிரிக்க கண்டத்தவரான 'அறாபி பாஸா'வின் இலங்கை வருகையோடு அறிஞர் சித்தி லெப்பை போன்ற சிறந்த கல்விமான்களின் முயற்சியால் கொழும்பில் மருதானை ஸாஹிரா பாடசாலை ஆரம்பமாகி இலங்கையில் முதல் முஸ்லிம் பாடசாலை எனவும் வரலாற்றிலே பதிவாகியது. அன்று முதல், இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலே கல்வித்துறையிலே மறுமலர்ச்சி தோன்ற ஆரம்பமாகியது. மேற்குறித்த தலைவர்களின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வண்ணம் அப்போதைய சட்டசபை உறுப்பினராகவிருந்த மர்ஹூம் ஜாயா, மர்ஹூம் ராஷீக் பரீட் போன்றோர் நாடு முழுவதும் ஸாஹிராவின் கிளைகளை நிறுவத்தொடங்கினர். அதன் பலனாக தோன்றிய பல பாடசாலைகளை தற்போதும் கம்பளை,மாவனல்லை,புத்தளம், அநுராதபுரம்,ஹம்பாந்தோட்டை போன்ற பல பாகங்களிலும் காணலம். இவ்வாறு பல பாடசாலைகள் நிறுவப்பட்டாலும் கிராம புற முஸ்லிம்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
இருப்பினும் முஸ்லிம்களின் சமய, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ஒரு பாடசாலை கற்பிட்டிக்கு தேவை என்ற கருத்து நெடுங்காலமாக கற்பிட்டியின் முக்கிய புள்ளிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுவந்தது, எனினும், தேவையான மாணவர் தொகை, கட்டடம், தளபாட வசதி, ஆளணி என்பவற்றை காரணம் காட்டி அதற்கான முயற்சிகள் யாவும் கிடப்பில் போடப்பட்டன.
(இது ஒர் தொடரும் கதை....)


0 Comments