ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான 8ஆவது வரவு -செலவுத்திட்டமே
இன்று நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளார்.
*நாம் மாகாண சபை தேர்தலை நடத்தி இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
* பொதுநலவாய மாநாட்டின் வெற்றி வெளிநாடுகள் நமக்குக் கொடுத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
*மகிந்த சிந்தனை மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.
*நாம் மாகாண சபை தேர்தலை நடத்தி இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
*எங்களுடைய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது.
*நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகும்.
*கிராமிய மட்டத்தில் தொழில்புரியும் அரச உத்தியோகத்தர்கள் சிரமத்தின் மத்தியில் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்கள்.
*அரச வங்கிகளை ஒருபோதும் தனியார் மயப்படுத்த மாட்டேன் - ஜனாதிபதி உரை.
*நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர்வழங்கல் திட்டங்களுக்காக 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
*நாட்டை மீட்பதற்கும் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் புனர்வாழ்வுக்கும் அரச வருமானம் செலவிடப்பட்டது.
*பயங்கரவாதத்திலிருந்து
நாட்டை மீட்பதற்கும் மீள்குடியேற்றத்துக்கும் மீள்குடியேறிய மக்களின்
புனர்வாழ்வுக்கும் அரச வருமானம் செலவிடப்பட்டது.
*மதுபானம், சிகரட் மீதான அரச வரி வருமானம் குறைவடைந்துள்ளது.
* வடக்கு
கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களில் நீர்வழங்கல், மின்சாரம் உள்ளிட்ட
தேவைகளுக்கு 14 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
*ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியுள்ளோம்.
*25% ஆக உள்ள தொலைத்தொடர்பு வரியில் மாற்றம் ஏற்படுத்தப்படாது.
*கடந்த காலங்களில் சுனாமி மற்றும் யுத்தம் ஆகியவற்றின்போது வெளிநாடுகள் நமக்கு பெரும் உதவி செய்துள்ளன.
*1557 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.
*63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம்.
*2014
ஆம் ஆண்டு முதல் விவசாய ஓய்வூதிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும். இதற்காக
அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை முதலாக வழங்குகின்றது.
*வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சார நடவடிக்கைகளுக்கு 1400 மில்லியன் ரூபா.
*மீன் உற்பத்தியை அதிகரிப்பதனூடாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
*மிருக வைத்தியர்களுக்காக 7500 மாதாந்த கொடுப்பனவு


0 Comments