Subscribe Us

இந்தியக் கடற்படை கப்பல் வந்தடைந்தது

இந்தியக் கடற்படைக் கப்பலொன்று நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

கிழக்குக் கடற்பரப்பு தளபதி ரியர் அட்மிரல் ஸ்ரீமவன் ரணசிங்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயானந்த கொலம்பகேயின் வழிகாட்டலின் கீழ்  ஐ.என்.எஸ் சிவலிக் என்ற இந்தக் கப்பலில் 50 அதிகாரிகளும் 350 கடற்படை வீரர்களும் வருகைதந்தனர்.

இந்தக் கப்பல் டிசெம்பர் 29 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். இக்காலப்பகுதியில் நட்புரீதியான பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரி;வித்துள்ளது.


Post a Comment

0 Comments