Subscribe Us

விபசார விடுதி சுற்றி வளைப்பு: மூன்று பெண்கள் கைது

 
 
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபசார விடுதி காத்தான்குடி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதோடு மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் அதனை நடாத்தி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் மட்டக்களப்பு மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Post a Comment

0 Comments