மன்னார் பொலிஸாருக்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜய சேன தலைமையிலான
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார் இன்று காலை 11.30 மணியளவில் மன்னார்
சௌத்பார் கடற்கரைப்பகுதிக்குச் சென்று 19 பொதிகளைக் கொண்ட 40 கிலோ கிராம்
நிறை கொண்ட கேரளா கஞ்சாப்பொதியினை மீட்டுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த இருவர் கைது செய்யப்பட்டதோடு கஞ்சாவை ஏற்றிச்
செல்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டியினையும் மன்னார் பொலிஸார்
மீட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

0 Comments