Subscribe Us

சனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை

இக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது.

இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இலங்கை தமிழ் ஊடகங்களும் , இணையத் தளங்களும் தூக்கிப் பிடித்து நிற்கின்ற விடயம் இசைப்பிரியா கொல்லப்பட்ட கணொளியை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விவகாரம். யார் இந்த இசைப்பிரியா ? பாசிஷ புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், புலிகளின் புகழ் பாடும் பாடல்கள் , நாடகங்கள் பலவற்றிலும் நடித்தவர். என்பதால் இவர் புலிகளின் ஆதரவாளர் என்பதில் ஐயம் ஏதும் இல்லை அதனால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

இது இவ்வாறு இருக்க புலிகளுடைய அல்லது புலிகள் கொல்லப்படுகின்றதைப் போன்ற விடயங்களை , வீடியோக்களை காட்சிப்படுத்தத் தெரிந்த சனல் 4 தொலைக்காட்சிக்கு இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீதான பாசிஷ புலிகளின் இனச்சுத்திகரிப்பினை காட்சிப்படுத்த தவறுவது ஏன் ? முஸ்லிம்கள் என்பதனாலா ?

Post a Comment

0 Comments