விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம் பெண்ணை
இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, படுகொலை செய்துள்ளதாக சேனல் 4
புதிதாக வெளி யிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.
சேனல் 4 காணொளி ஒரு சோடிக்கப்பட்ட கபடமான வழமையான பழிவாங்கல் நாடகம் என்று இலங்கை
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.
“இந்த குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்டையற்ற குற்றச்சாட்டுக்கள் அவை.
இசைப்பிரியா என்பவர் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கர்ணல்
தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று
எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறு யாருமோ உயிரோடு பிடிபடவில்லை. நாங்கள்
உயிரோடு பிடித்த 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு சமூகத்துடன்
இணைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் இசைப்பிரியா அவர்களுடன் இருக்கவில்லை” என்றார்
இலங்கை இராணுவப் பேச்சாளர்.
“அந்த வீடியோ உண்மையானதா என்று நிபுணர்கள் தான் ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.
வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார் களா அல்லது யாரை யாவது நடிக்க
வைத்திருக் கிறார்களா என்று எங் களுக்கு தெரியவில்லை. இது நடிப்பாகக் கூட இருக்கலாம்.
இந்த வீடியோவை தொழில் நுட்ப ரீதியில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வீடியோ ஒரு
நாடகம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்” என்றார் ருவன் வணிகசூரிய. சேனல் 4
தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உண்மையில் இந்தப் பிரச்சினை பற்றி தெரிந்துகொள்ளும்
தேவை இருந்தால் இலங்கைக்கு வந்து அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு அவற்றைக்
கொண்டுவர முடியும் என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
“இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்க
வேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச்
செல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நாடு கடந்த தமிbழ அரசாங்கம் போன்ற பல
அமைப்புகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம்
வாங்க பணம் கொடுத்தார்கள்.
இன்று அவர்கள் அந்தப் பணத்தை இலங்கைக்கு எதிரான பிரசாரங்களுக்காக செலவிடுகிறார்கள்.
தமிழ் பிரி வினைவாதிகளின் பணத்தின் பிடியில் சேனல் 4 வும் சிக்கியிருக்கிறது”
என்றார்.

0 Comments