Subscribe Us

பரபரப்பான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய அணி

இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளால் வென்றது.

விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தயி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்களைப் பெற்றது.

வீரட் கோஹ்லி 100 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்ததால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 18 சதத்தை தவறவிட்டார்.

அணித்தலைவர் டோனி 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள்,  3 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் ரவி ராம்போல் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி  49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்கிந்திய அணியின் 7 ஆவது வரிசை வீரர் டெரன் சமி 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பெற்று தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் அவரே தெரிவானார்.

லென்டில் சிமோன்ஸ் 74 பந்துகளில் 62 ஓட்டங்களையும் கீரோன் பொவெல் 70 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றனர்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் 1:1 விகிதத்தில் சமநிலையில் சமநிலையில் உள்ளன.

Post a Comment

0 Comments