Subscribe Us

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 27.9 வீதத்தினால் அதிகரிப்பு

(ரொபட் அன்டனி )

இலங்­கைக்கு வரும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­

க­ரித்துச் செல்­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கடந்த ஒக்­டோபர் மாதத்தில் மட்டும் இலங்கை வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை 102805 ஆக பதிவுசெய்­யப்­பட்­டுள்­ளது.
கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் இலங்கை வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இது 27.9 வீத அதி­க­ரிப்பைக் காட்­டு­வ­தாக இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் இலங்கை வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை 80379 ஆகப் பதிவுசெய்­யப்­பட்­டது.

இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்தில் இலங்­கைக்கு 89761 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தி­ருந்­தனர். இதே­வேளை கடந்த ஒக்­டோபர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு 904015 சுற்­றுலாப் பய­ணிகள் உலக நாடு­க­ளி­லி­ருந்து வரு கைதந்­துள்­ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு 774151 சுற்­றுலாப் பய­ணி­களே வருகை தந்­தி­ருந்­தனர். அந்­த­வ­கையில் 2012ஆம் ஆண்டு ஒக்­டோபர் வரை­யான காலப்­ப­கு­தி­யையும் 2013 ஆம் ஆண்டு ஒக்­டோபர் வரையான காலப்­ப­கு­தி­யையும் ஒப்­பி­டு­கையில் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையில் 16.8 வீத அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு ஒரு மில்­லியன் சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தி­ருந்­தனர். அந்­த­வ­கையில் இவ்­வ­ருடம் 1.2 மில்­லியன் சுற்­றுலாப் பய­ணி­களை இலக்குவைத்தே வேலைத்­திட்­டங் கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 2016 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்­றுலாப் பய­ணி­க ளை இலங்­கைக்கு வர­வ­ழைப்­பதே அர­சாங்­கத்தின் இலக்­காக அமைந்­துள்­ளது.

2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு - செல­வுத்­திட்­டத்தை கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சுற்­றுலாப் பய­ணி­களை அதி­க­ளவில் வர­வ­ழைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.
மேலும் இலங்கை சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­யகம் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையை அதி­க­ரிக்கும் நோக்கில் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. இது­வரை இந்­தி­யாவின் பெங்­களூர் மற்றும் மும்பை ஆகிய நக­ரங்­களில் சுற்­றுலா ஊக்­கு­விப்பு மெகா பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. மேலும் சீனாவின் பீஜிங் நக­ரிலும் மெகா சுற்­றுலா ஊக்­கு­விப்புப் பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.
இலங்­கைக்கு அதி­க­ளவில் இது­வரை இந்­தி­யா­வி­லி­ருந்தே சுற்­றுலாப் பய­ணிகள் வந்­துள்­ளனர். கடந்த 10 மாதங்­களில் இலங்­கைக்கு இந்­தி­யா­வி­லி­ருந்து 151896 சுற்­றுலாப் பய­ணிகள் வருகைதந்­துள்­ளனர்.
கடந்த ஒக்­டோபர் மாதத்தில் மட்டும் 30512 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­துள்­ளனர். அதற்கு அடுத்­த­ப­டி­யாக கடந்த 10 மாதங்­களில் இலங்­கைக்கு பிரிட்­ட­னி­லி­ருந்து 100089 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர். கடந்த ஒக்­டோபர் மாதத்தில் மட்டும் பிரிட்­ட­னி­லி­ருந்து 9375 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­துள்­ளனர். அதற்கு அடுத்த இடத்தில் அதி­க­ளவில் ஜேர்­ம­னி­யி­லி­ருந்து சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­துள்­ளனர். ஜேர்­ம­னி­யி­லி­ருந்து கடந்த 10 மாதங்­களில் 66762 சுற்­றுலாப் பய­ணிகள் இல ங்கை வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
கடந்த ஒக்­டோபர் மாதத்தில் ஜேர்மனியிலிருந்து மட்டும் 6812 சுற்­றுலாப் பய­ணி­கள்­ இ­லங்கை வந்­துள்­ளனர். அதற்கு அடுத்­த­தாக பிரான்ஸ், மாலை­தீவு, அவு ஸ்­தி­ரே­லியா, சீனா மற்றும் அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­துள்­ளனர். சீனா­வி­லி­ருந்து இவ்­வ­ரு­டத்தில் இது­வரை 34951 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­துள்­ளனர். குறிப்­பாக கடந்த ஒக்­டோபர் மாத த்தில் 5798 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­து ள்­ளனர். கடந்த செப்­டெம்பர் மாதத்தில் 2200 சுற்­றுலாப் பய­ணி­களே சீனா­வி­லி­ருந்து வந்­தி­ருந்­தனர். அந்­த­வ­கையில் நோக்கும் போது ஒரு மாதத்தில் பாரிய அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கதாகும்.

Post a Comment

0 Comments