Subscribe Us

வரலாற்றில் இன்று நவம்பர் 21

1877 : ஒலியைப் பதி­யவும் கேட்­கவும் உத­வக்­கூ­டிய போனோ­கிராஃப் கரு­
வியைத் கண்­டு­பி­டித்­த­தாக எடிசன் அறி­வித்தார்.

1272 : மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்­த­தை­ய­டுத்து அவரின் மகன் எட்வேர்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­ரானார்.
 
1791 : நெப்­போ­லியன் பொனபார்ட் பிரெஞ்சு இரா­ணு­வத்தின் தள­ப­தி­யானான்.
 
1877 : ஒலியைப் பதி­யவும் கேட்­கவும் உத­வக்­கூ­டிய போனோ­கிராஃப் என்ற கரு­வியைத் தாம் கண்­டு­பி­டித்­த­தாக தோமஸ் அல்வா எடிசன் அறி­வித்தார்.
 
1894 : சீனாவின் மஞ்­சூ­ரி­யாவில் ஆர்தர் துறை­மு­கத்தை ஜப்பான் கைப்­பற்­றி­யது.
 
1905 : ஆற்­ற­லுக்கும் திணி­வுக்கும் இடை­யே­யான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்­டு­ரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளி­யிட்டார்.
 
1920 : அயர்­லாந்தில் கால்­பந்துப் போட்டி நிகழ்­வொன்றில் பிரித்­தா­னியப் படை­யினர் சுட்­டதில் 14 ஐரிஷ் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.
 
1962 : சீன மக்கள் விடு­தலை இரா­ணுவம் இந்­தோ-­சீனப் போரில் போர் நிறுத்தம் செய்­வ­தாக ஒரு­தலைப் பட்­ச­மாக அறி­வித்­தது.
 
1963 : இந்­தி­யாவின் முத­லா­வது ஈர­டுக்கு உளவு ஏவு­கணை ஏவப்­பட்­டது.
 
1969 : ஓக்­கி­னாவா தீவை 1972 இல் ஜப்­பா­னி­ய­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் அமெ­ரிக்க  ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்­ச­னுக்கும் ஜப்பான் பிர­தமர் ஐசாக்கு
சாட்­டோ­வுக்கும் இடையில் ெவாஷிங்­டனில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.
 
1974 : இங்­கி­லாந்தின் பேர்­மிங்­ஹாமில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தி­னரின்
குண்­டு­வெ­டிப்பில் 21 பேர் கொல்­லப்­பட்­டனர்.
 
1980 : அமெ­ரிக்­காவின் நெவாடா மாநி­லத்தில் விடுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்­லப்­பட்டு 650 பேர் காய­ம­டைந்­தனர்.
 
1996 : புவேர்ட்டோ ரிக்­கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 33 பேர் கொல்­லப்­பட்­டனர்.
 
2002: பல்­கே­ரியா, எஸ்­டோ­னியா, லத்­வியா, லித்­து­வே­னியா, ருமே­னியா,
ஸ்லோவாக்­கியாஇ ஸ்லோவேனி ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்­தன.
 
2004 : டொமி­னிக்கா தீவில் இடம்­பெற்ற பூம்பகம் கார­ணா­மக போர்ட்ஸ்­மவுத் நகரில் பலத்த சேதம் ஏற்­பட்­டது.
 
2004: ஈராக் செலுத்த வேண்­டிய சுமார் 100 பில்­லியன் டொலர் கடன் தொகையை இரத்துச் செய்வதாக பாரிஸ் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த 19 நாடுகள் அறிவித்தன.
 
2009: சீனாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 108 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments