மத்திய மாகாணத்தில் நடைபெற்றுவருகின்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண
மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சைக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்களில் 13
கேள்விகளும் ஒரேமாதிரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய வினாத்தாள்களிலேயே இவ்வாறு வினாக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரலாறு பாடத்திற்கான பரீட்சை கடந்த 13 ஆம் திகதி நடைபெற்றது. அதிலிருக்கின்ற 13 வினாக்களை போலவே இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட விவசாய பரீட்சைக்கான வினாப்பத்திரத்திலும்; இருப்பதாக மத்திய மாகாண கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Comments