Subscribe Us

வரலாற்றில் இன்று நவம்பர் 05

1872: அமெ­ரிக்­காவில் வாக்­க­ளித்த பெண்­ணுக்கு அப­ராதம்


1530 : நெதர்­லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்­மேர்ஸ்வால் என்ற நக­ரத்தை அழித்­தது.


1556 : முக­லாயப் பேர­ரசுப் படைகள் இந்­தி­யாவின் சூர் பேர­ரசின் தள­பதி ஹேமு
என்­ப­வரின் படை­களை பானிபாட் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டித்­தன. அக்பர் இந்­தி­யாவின் அர­ச­ரானார்.


1605 : ரொபேர்ட் கேட்ஸ்பி என்­ப­வரால் இங்­கி­லாந்து நாடா­ளு­மன்­றத்தைத் தகர்க்க எடுக்­கப்­பட்ட முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது.


1814 : இலங்­கையின் வடக்கு மற்றும் வட­மேற்குப் பகு­தி­களில் இடம்­பெற்ற பெரும் சுழற்­காற்று யாழ்ப்­பாணம், விடத்தல் தீவு மற்றும் மன்னார் ஆகிய இடங்­களில் பெரும் அழிவை ஏற்­ப­டுத்­தின.


1831 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் அடிமைக் கிளர்ச்­சியில் ஈடு­பட்ட நாட் டர்னர்
வேர்­ஜீ­னி­யாவில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு தூக்குத் தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.


1861 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் மெல்­பேர்னில் முத­லா­வது மெல்பேர்ன் கிண்ணக் குதிரைப் பந்­தயப் போட்டி ஆரம்­ப­மா­கி­யது.


1862 : அமெ­ரிக்­காவின் மின­சோட்­டாவில் 303 டகோட்டா பழங்­கு­டி­யினர்
வெள்­ளை­யி­னத்­த­வரை கொலை செய்த குற்­றத்­துக்­காக குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்டு தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.


1872: அமெ­ரிக்­காவில் பெண்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை மீறி, வாக்­க­ளித்த சுசான் பி. அந்­தனி எனும் பெண்­ணுக்கு 100 டொலர் அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.


1895 : மோட்டார் வாக­னத்­துக்­கான முத­லா­வது அமெ­ரிக்கக் காப்­பு­ரி­மத்தை ஜோர்ஜ்  செல்டன் பெற்றார்.


1911 : செப்­டம்பர் 29 இல் ஓட்­டோமான் பேர­ர­சுடன் இத்­தாலி போரை அறி­வித்த பின்னர் திரிப்­போலி மற்றும் சிரெ­னாய்க்கா ஆகி­ய­வற்றை இத்­தாலி தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.


1913 :  சைப்­பி­ரசை ஐக்­கிய இராச்­சியம் தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.


1917 : எஸ்­தோ­னி­யாவில் கம்­யூ­னிஸத் தலைவர் ஜோன் ஆன்வெல்ட் புரட்­சி­யா­ளர்­க­ளுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்­பற்­றினார்.


1940 : பிராங்­கிளின் ரூஸ்வெல்ட் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக
மூன்­றா­வது தட­வை­யாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.


1945 : நேதா­ஜியின் இந்­திய தேசிய இரா­ணு­வத்­தினர் மீதான வழக்கு விசா­ரணை டில்லிb செங்­கோட்­டையில் ஆரம்­ப­மா­னது.


1965 : ரொடீ­சி­யாவில் அவ­ச­ர­காலச் சட்டம் நடை­மு­றைக்கு வந்­தது.


1967 : லண்­டனில் இடம்­பெற்ற தொட­ருந்து விபத்தில் 49 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1971 : இன்ரெல் நிறு­வனம் உலகின் முதல் நுண்­செ­ய­லி­லான 4004 இனை வெளி­யிட்­டது.
 
1996 : பாகிஸ்­தானில் பிர­தமர் பெனாஸிர் பூட்டோ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஜனா­தி­பதி பரூக் அஹமட் கான் கலைத்தார்.
 
1999 : இலங்கைப் படை­க­ளுக்­கெ­தி­ராக விடு­தலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நட­வ­டிக்­கையின் முத­லா­வது கட்டம் ஏ-9 நெடுஞ்­சா­லையின் தெற்­குப்­பு­ற­மாக விளக்­கு­வைத்த குளம் என்ற பகுதி கைப்­பற்­றப்­பட்­ட­துடன் முடி­வுக்கு வந்­தது.


2006 : 1982 ஆம் ஆண்டில் 148 ஷியா முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டமை தொடர்­பாக தொட­ரப்­பட்ட வழக்கில் இடைக்­கால ஈராக் அரசின் சிறப்பு நீதி­மன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுஸை­னுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.
 
2007: சந்திரனுக்கான சீனாவின் முதலாவது செய்மதியான சாங் 01 சந்திரனை வலம்வர ஆரம்பித்தது.

2009: அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவர்  டெக்சாஸ் நகரில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 13 பேர் பலியானதுடன் 29 பேர் காயமடைந்தனர்.

Post a Comment

0 Comments