கற்பட்டியில் ஏற்பாடகியுள்ள இரத்த தானத்தில் அனைத்து
இளைஞர்கள்,யுவதிகள்,பெரியார்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு SLTJ Kalpitiya Branch வேண்டிக் கொள்கின்றார்கள்.
ஏன் இந்த இரத்த தானம்?
விபத்து, இயற்கை பேரழிவு, தாக்குதல் மற்றும் போர்க்காலங்களில் ஏராளமானவர்கள்தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர்.சிலர் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர். இப்படிபட்ட சூழ்நிலைகளில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம்கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை.
இதனாலும் அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் ரத்த தானம் உயிர்தானத்துக்குஇணையாக வர்ணிக்கப்படுகிறது.அப்பேர்பட்ட ரத்தம் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோமா?
ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே �ஹீமோகுளோபின்� என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்தவேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்புஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும்
சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
*ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம்.
*ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்" அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்" அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்" போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
*பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள்,
ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
*ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood
Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன.இவை தவிர திரவ நிலையில் �பிளாஸ்மா� என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்" செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அதுஎடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும்.திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.









0 Comments