(தகவல்-HNC இளைஞர் கழகம்)
கற்பிட்டி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் M.B.M. அர்ஸாத் அவர்கள் கடந்த 21.10.2013 அன்று ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றத்திலே தனது கன்னியுரையை சமரசமும் சமூக ஒண்றிணைப்பும் என்ற தலைப்பின் கீழும் தமிழ் மொழியிலும் சகோதர மொழியிலும் உரை நிகழ்த்தி இருந்தார். குறித்த உரையின் ஆரம்பத்தின் போது கற்பிட்டி நகரிலே காணப்படும் அரச மரத்தின் வரலாற்றை சகோதர மொழியிலே கூறியமையானது பாராளுமன்ற செயலாளர்களிடமும் சகோதர இன சகோதரர்களிடமும் கற்பிட்டி இளைஞர்,பெரியார்கள் அனைவரினதும் பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments