Subscribe Us

அப்புறம் என்ன பசங்களா … போட்டுக்கிட்டு “நிஷார் மாமாட இறைச்சி கடை,Faizer Sticker கடை” வீதியிலே நில்லுங்கோ !! அங்க தானே உங்க ஆளுங்க வருவாங்கோ !! ( ஹி..ஹி..ஹி )

சோம்பலான இளைஞர்களும் குறுக்கு வழியில் கட்டுடலைப் பெறுவதற்காக ஆண்களுக்கான உலகின் முதலாவது ஆண்களுக்கான உள்ளாடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஷ் புனூ (45 வயது) மற்றும் அவரது நண்பரும் கணக்காளருமான றிக்கி ரொபின்ஸன் (42 வயது) இணைந்த ஆண்களுக்கான இந்த உள்ளாடையை (பெனியன்) உருவாக்கியுள்ளனர்.



இவர்களின் நண்பர்கள் சிலர் அவர்களது உடலின் தோற்றத்தை மாற்றுவதற்காக ஜிம்மில் ஈடுபடுவதை அவதானித்த பின்னரே கட்டுடல் உள்ளாடையை உருவாக்கும் சிந்தனை தோன்றியுள்ளது.
இழுவைக்குள்ளாகக் கூடிய விசேடமான ஒரு மூலப்பொருளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த உள்ளாடையானது ‘பங்கிபொட் மஸ்ல் டொப்ஸ்’ என அழைக்கப்படுகின்றது.
இதனை உருவாக்குதவதற்கு லண்டனிலுள்ள உற்பத்தி மேம்பாட்டு நிறுவனமொன்று அஷ் மற்றும் ரிக்கிக்கு உதவி செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிதி உதவியுடன் முதலில் தயார் செய்யப்பட்ட 100 உற்பத்திகளும் விரைவில் விற்பனையாகியுள்ளது.
தற்போது வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் 4 அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பங்கிபொட் மஸ்ல் டொப்ஸ்’  www.funkybod.com இணையத்தளத்தினூடாக 1000 உற்பத்திகள் விற்பனையாகியுள்ளதாம். இதன் விலை 29.99 பவுண்களாகும் (சுமார் 6275 ரூபா).
ஆரோக்கியமான மெலிவான ஆண்கள் இந்த உள்ளாடை அணிந்து கொள்வதன் மூலம் பரந்த மார்பு, விரிந்த தோள்பட்டை, தட்டையான வயிறு போன்ற தோற்றத்தை உடனே பெற்றுக் கொள்ள முடியும்.
‘எங்களது வாடிக்கையாளர்கள் அநேகர் கலிபோனியாவைச் சேர்ந்தவர்கள். பெண்களின் தோற்றத்தை எடுப்பாக்கும் உள்ளாடை போல இது ஆண்களுக்கு எடுப்பானதாக அமைந்து தன்னம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் தன்னம்பிக்கையை விற்பனை செய்கிறோம்’ எனத் உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments