Subscribe Us

செக்ஸ் பற்றைகளை எரித்து கிராம சேவையாளர் முன்மாதிரி!(படங்கள் இணைப்பு)

யாழ். அல்லைப்பிட்டியில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பற்றைகள் கிராம சேவையாளர் இரட்னேஸ்வரனால் தீ மூட்டி எரிக்கப்பட்டன.

கிராமத்தை சேர்ந்த இளையவர்களின் ஆதரவுடன் இப்பற்றைகளைகிராம சேவையாளர் எரித்தார். ஊர் மனைகளுக்கு செல்லும் பகுதிகளில் இவை காணப்பட்டன.

பாலியல் ஒழுக்கம் அற்ற ஆண்களும், பெண்களும் இப்பற்றைகளுக்குள் புகுந்து முறைகேடாகநடக்கின்றனர் என்றும் அநேகர் வெளியூர் ஆட்கள் அல்லது புதியவர்கள் என்றும் அவதானிக்கப்பட்டது.

அத்துடன் இப்பற்றைகளுக்குள் மறைந்து இருந்து மது அருந்துகின்றவர்கள் குறித்தும் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்களின் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு கிராம சேவையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.










Post a Comment

0 Comments