Subscribe Us

அரச வைத்திய அதிகாரிகள் நாடு தளுவிய வேலை நிறுத்தம்


அரச வைத்திய அதிகாரிகள் நாடு தளுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். மத்திய செயற்குழுக்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க நவம்பர் நான்காம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர்  நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் ;
அரசினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய வைத்தியர்களுக்கான முதலாம் தர உயர்வு 10 வருடத்துக்குள் வழங்கப்பட வேண்டும். எனினும் , 18 வருடம் சென்ற பிறகும் தர உயர்வு வழங்கப்படாமையினால் வைத்தியர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
 இது தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளருடன் பலதரப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் இணக்கம் காணப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உரிய அதிகாரிகளிடமிருந்து  சாதகமான பதில் கிடைக்காமையை அடுத்து பணிப்பகிஷ்கரிப்புக்குச்  செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதுடன் ,  இதனால் நோயாளர்கள் பாதிக்கப்படுவார்களாயின் அதிகாரிகளே அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
பணிப்பகிஷ்கரிப்பின் போது அவசர சேவைகளை  வழமைபோல் தொடரவுள்ளதுடன், மகரகம புற்றுநோய் வைத்தியசாலை ,  டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை ,  லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை ,  காசல் வைத்தியசாலை மற்றும்
சிறிமாவோ பண்டாரநாயக்கா வைத்தியசாலைகளை பணிப்பகிஷ்கரிப்பில் இணைத்துக் கொள்ளவில்லை.
பணிப்பகிஷ்கரிப்பின் பின்னரும் அதிகாரிகள் நோயாளர்களின் நலன்கருதி உரிய தீர்வை பெற்றுக் கொடுக்காவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமென எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments