Subscribe Us

வெங்காயத்திற்கான வரியை உயர்த்தி கசினோவுக்கு வரிச்சலுகை - எரான் விக்கிரமரட்ண

அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக கசினோ சூதாட்டத்தை சட்டமாக்கி அதற்கு அரச அங்கீகாரத்தை வழங்க முயற்சிப்பதை ஐ.தே.கட்சி கடுமையாக எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.
வெங்காயத்திற்கு வரியை அதிகரிக்கும் அரசாங்கம் கசினோ சூதாட்டத்திற்கு சலுகைகளை வழங்குவது எவ்வாறு நியாயமாகுமென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
இது தொடர்பாக எரான் விக்கிரமரட்ண எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
 
விபசாரம், சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம் என நாட்டுக்குள் எத்தனையோ சமூகத்தை சீரழிக்கும் செயற்பாடுகள் உள்ளன.
 
இவையனைத்தையும் நாம் எதிர்க்கின்றோம். சூதாட்டம் எந்த ரூபத்தில் தலைதூக்கினாலும் அதற்கு ஆதரவளிக்கமாட்டோம்.
 
அண்மையில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்திருந்தார்.
 
எனவே, சட்டவிரோதமான விடயத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கி எப்படியாவது பணம் சம்பாதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். (VK)

Post a Comment

0 Comments