கற்பிட்டி பலநாக்குக் கூட்டுறவு சங்கத்தின்
முக்கிய வர்த்தக நிலையமான “கோப்சிட்டி” வர்த்தக நிலையம், ஏத்தாளை எரிபொருள்
நிரப்பு நிலையம் மற்றும் கூட்டுறவுக்கிளை ஆகியன மூடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
அத்துடன் அவற்றில் பணிபுந்த இரு அதிகாரிகள் சுமார் 45 லட்சம் ரூபா
நிதிமோசடி செய்துள்ளதுடன் அவர்கள் இருவேறு நாடுகளுக்குத் தப்பிச்
சென்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இது தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரியினை தொடர்பு கொன்ட போது அவர் பின்வரும் கருத்தினைத் தெரிவித்தார்.
ஏத்தாளை கிளை மற்றும் எரிபொருள் நிலையத்தில் 25 லட்சம் ரூபாவும், கற்பிட்டி நகர “கோப்சிட்டி” வர்த்தக நலையத்தில் 20 லட்சம் ரூபாவும் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக இது போன்ற மோசடிகள் பற்றி பணிப்பாளர் சபைக்கு பல முறை அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் உறுப்பினர்கள் அந்த அதிகாரிகளுக்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவே இருந்தனர். இது போன்ற மோசடி கற்பிட்டி சின்னக்குடியிருப்பு கூட்டுறவுக் கிளை மற்றும் எரிபாருள் நிரப்பு நிலையத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் குறித்த சங்கத்தை கணக்காய்வு படுத்துவதற்கு பலாத்காரமாக தடுத்து வருகிறது. அதனால் அடுத் அதிகாரிகளும் இவ்வாறு தப்பிச் செல்லலாம் என சந்தேகம் நிலவுவதால் இனி இருக்கின்ற ஏனைய அதிகாரிகளின் கடவுச் சீட்டுளை பொலிஸ் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையானது, காரியலயத்தில் பணிபுரிகின்ற ஏனைய அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் சம்பளம் வழங்க முடியாத நலைமையைத் தோற்றுவிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்...... “இதற்கு தகுந்த நடவடிக்க்கள் எடுக்கப்படாதவிடத்து எல்லாக் கிளைச்சங்க அங்கத்தவர்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாரகுமாறு அழைப்பு விடுக்கின்றேன் எனக் குறிப்பிட்டதுடன் இதற்கு கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அவர்கள்தான் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிரதேச சபை உறுப்பினர் அவர்களை தலைவாராக கிழைச்சங்கம் தெரிவு செய்த போதிலும், அந்த பதவியை பிரதேச சபைக் கேட்பதற்காக தற்போதைய தலைவருக்கு விட்டுக்கொடுத்தமை குறுப்பிடத்தக்கதாகும்.

0 Comments