Subscribe Us

வரலாற்றில் இன்று ஒக்டோபர் 29

1960: மொஹமட் அலிக்கு முதல் வெற்றி

1969 : பைசண்டைன் படைகள் சிரி­யாவின் அண்­டியோக் நகரைக் கைப்­பற்­றின.

1422 : ஏழாம் சார்ல்ஸ் பிரான்ஸின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.


1618 : ஆங்­கி­லேய எழுத்­தா­ளரும் நாடுகாண் பய­ணி­யு­மான சேர் வால்ட்டர் ரேலி இங்­கி­லாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்­ன­ருக்கு எதி­ராக சூழ்ச்சி செய்­த­தாகக் குற்றம் சாட்­டப்­பட்டு தலை துண்­டிக்­கப்­பட்டு மர­ணதண்­டனைக்­குள்­ளாக்­கப்­பட்டார்.


1665 : கொங்கோ பேர­ரசை போர்த்­துக்கல் படை­யினர் தோற்­க­டித்து, அதன் மன்னன் முதலாம் அண்­டோ­னி­யாவைக் கொன்­றனர்.


1859 :  மொரோக்கோ மீது ஸ்பெயின் போரை அறி­வித்­தது.


1863 : சுவிட்­சர்­லாந்தில் கூடிய 16 நாடு­களின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச
செஞ்­சி­லுவைச் சங்கம் அமைக்கத் தீர்­மா­னித்­தனர்.


1886 : பிரித்­தா­னிய இந்­திய அர­சுக்கும், திரு­வாங்கூர் மன்­ன­ருக்கும் இடையே
முல்லைப் பெரி­யாறு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.


1901 : ஐக்­கிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி வில்­லியம் மக்­கின்­லியைக் கொலை செய்த
குற்­றத்­திற்­காக லியோன் சொல்கோஸ் என்­ப­வ­னுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.


1913 : எல் சல்­வ­டோரில் பெரும் வெள்ளம் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கானோர் இறந்­தனர்.


1922 : முசோ­லினி, இத்­தா­லியின் பிர­தம மந்­தி­ரி­யானார்.


1923 : ஓட்­டோமான் பேர­ரசு முறி­வ­டைந்­ததைத் தொடர்ந்து துருக்கி குடி­ய­ர­சா­னது.


1929 : "கருப்பு செவ்வாய்" என அழைக்­கப்­பட்ட இந்­நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்­சி­ய­டைந்­தது. பெரும் பொரு­ளியல் வீழ்ச்சி ஆரம்­ப­மா­னது.


1948 : "சாஃப்சாஃப்" என்ற பாலஸ்­தீனக் கிரா­ம­மொன்றில் புகுந்த இஸ்­ரே­லி­யர்கள் 70 பாலஸ்­தீ­னர்­களைச் சுட்டுக் கொன்­றனர்.


1956 : இஸ்­ரே­லியப் படைகள் சினாய் தீப­கற்­பத்தைக் கைப்­பற்றி எகிப்­தியப் படை­களை சுயஸ் கால்வாய் நோக்கி விரட்­டினர்.


1957: இஸ்­ரே­லிய நாடா­ளு­மன்­றத்தில் வீசப்­பட்ட கிரனேட் வெடித்­ததால் பிர­தமர் டேவிட் பென் குரி­யோ­னனும் அவரின் 5 அமைச்­சர்­களும் காய­ம­டைந்­தனர்.


1960: அமெ­ரிக்­காவின் கெண்­டக்கி மாநி­லத்தில் நடை­பெற்ற தனது முதல் தொழிற்சார் குத்­துச்­சண்டை போட்­டியில் கஸியஸ் கிளே (மொஹமட் அலி) வென்றார்.


1961 : ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசில் இருந்து சிரியா வெளி­யே­றி­யது.


1964 : தங்­க­னிக்கா மற்றும் சன்­சிபார் இரண்டும் இணைந்து தன்­சா­னியாக் குடி­ய­ரசு ஆகி­யது.


1964 : 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஒஃப் இந்­தியா" உட்­பட பல பெறு­மதி மிக்க
வைரங்கள் நியூயோர்க் நகரில் உள்ள அமெ­ரிக்க அருங்­காட்­சி­ய­கத்தில் இருந்து திரு­டப்­பட்­டன.


1967 : மொண்ட்­ரியால் நகரில் 50 மில்­லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்­காட்சி முடி­வ­டைந்­தது.


1969 : உலகின் முத­லா­வது ஒரு கணனியில் இருந்து வேறொரு கணி­னிக்­கான இணைப்பு ARPANET மூலம் இணைக்­கப்­பட்­டது.


1983 : துருக்­கியில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் 1,300 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1985: லைபீ­ரி­யாவில் நடை­பெற்ற முத­லா­வது பல்­கட்சித் தேர்­தலில் மேஜர் ஜெனரல் சாமுவேல் கே. டோ வெற்றி பெற்றார்.


1991 : நாசாவின் கலி­லியோ விண்­கலம் 951 காஸ்ரா எனும் விண்­கல்­லுக்கு அரு­காகசென்­றது. விண்கல் ஒன்­றுக்கு மிக அரு­காகச் சென்ற முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.


1998 : டிஸ்­க­வரி விண்­ணோடம் எஸ்.ரி.எஸ். 95 என்ற விண்­கப்­ப­லுடன் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது. இதில் பயணம் செய்த 77 வயதான ஜோன் கிளென், விண்­வெ­ளிக்குச் சென்ற மிகவய­தான நப­ரானார்.


1998 : 39 பேருடன் சென்ற துருக்­கிய விமானம் ஒன்று குர்­தியத் தீ வி­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்­டது.


1998 : சூறா­வளி மிட்ச் ஹொண்ட்­டூ­ராசைத் தாக்­கி­யது.


1998: சுவீ­டனில் இரவு விடு­தி­யொன்றில் ஏற்­பட்ட தீவி­பத்­தினால் 68 பேர்
பலி­யா­ன­துடன் 200 பேர் காய­ம­டைந்­தனர்.


1999 : ஒரி­ஸாவில் இடம்­பெற்ற பெரும் சூறா­வ­ளி­யினால் 10,000 பேர் வரை இறந்­தனர். 2.5 மில்­லியன் மக்கள் வீடு­களை இழந்­தனர்.


2002 : வியட்­நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


2005 : டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர்.

2012: அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் சான்டி சூறாவளி தாக்கியதால் 288 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments